தாயின் பிரிவில்

தாயின் பிரிவில்

நான் உன்னை நினைத்தே வாழ்கிறேன்
ஏன் நீ பிரிந்தாய்...
உன் நிழலை இழந்தே வாடுகிறேன்
எங்கே நீ சென்றாய்......


கருவில் எனைச் சுமந்ததெல்லாம்
மறந்து விட்டாயா?...
கருணைத் துளியும் இல்லையென்று
துறந்து விட்டாயா?......

நான் உன்னை நினைத்தே வாழ்கிறேன்......

எத்தனைச் சொந்தம் வந்தாலும்
இன்பம் நூறு தந்தாலும்
தாய்ப் பாசம் ஆகிடுமா?......


ஆலயம் தோறும் சிலை உண்டு
அம்மன் பெயரும் பல உண்டு
ஆனால் பேசும் தெய்வம் நீதானே......


வான் விழும் மழையாக
விழிகள் அழும் வலியோடு...
நான் தவிக்கும் சோகத்தில்
ஒரு தாலாட்டு எனக்கு தாராயோ?......


உடனே வந்திடு சோகம் கலைத்திடு......
நான் உன்னை நினைத்தே வாழ்கிறேன்......

தாய் இல்லாது மகனுக்கும்
வேர் இல்லாது மலருக்கும்
முகந்தான் சிரித்திடுமா?......


பார்வை அற்ற மனதுக்கும்
பாசம் எனும் ஒளியிருக்கும்
தாயே ஒளியைத் தந்திடு......


எனைக் காண நீயின்று
வாராத நிலைக் கண்டு
இதயமும் இயங்காமல் இறக்கின்ற வழியுண்டு......


என்னுயிரே வந்திடு என்னுள்ளே கலந்திடு......
நான் உன்னை நினைத்தே வாழ்கிறேன்......

எழுதியவர் : இதயம் விஜய் (5-Jul-16, 7:40 am)
Tanglish : thaayin PIRIVIL
பார்வை : 1171

மேலே