மடியுமளவும் மறப்பதில்லை••
படைச்சவன் படைச்ச
உலகம் இங்கே இருக்கு
படைச்சவன் எங்கே
எவனோ படைச்சது
இங்கே இருக்கு வச்சி
படைக்க போரவரெங்கே
ஏக்கத்திற்கு தூக்கமில்லை
தூக்கத்திற்கு துக்கமில்லை
துக்கத்திற்கு ஆக்கமில்லை
ஆக்கத்திற்கு நோக்கமில்லை
நோக்கத்திற்கு பாசமில்லை
பாசத்திற்கு பேச்சேயில்லை
பேச்சிற்கு மூச்சேயில்லை போன
மூச்சிற்கு வருகையில்லை
வரவேற்க யாருமில்லை
பிறப்பும் இல்லை என்றால்
இறப்பும் இல்லை என்றால்
வாழ்விற்கு அர்த்தமில்லை
ஒருநாள் ஒருவாரம்ய
ஒருமாதம் ஒருவருடம்
அதற்குமேல் யாரும்
இறந்தோரை நினைக்க
ஒருவரும் ஒருவருமில்லை
நினைத்து விட்டால் யாரும்
மடியுமளவும் மறப்பதில்லை