இயற்கை.
அறிந்தவர்களும்
அறிஞர்களும்
தெரிந்தவர்களும்
புரிந்தவர்களும்
சொன்னார்கள்
"உலகம் ஒரு மாயை" என்று.
பஞ்ச பூதங்கள் நிலைத்திருக்க
பிறப்பன யாவும்
மரிப்பது இயல்பே.
இன்று நாயாக..
நாளை...மனிதனாக.
ஜென்மங்களில் பிறப்பு
மாறுதலின்றி இயங்குவதில்லை
இவ்வுலகம்.
இயற்கையே இறைவன்,
இயற்கையே ஆசான்,
இயற்கை கற்றுக் கொடுத்தை
பற்றிக்கொள்ளாவிடில்
பற்றி எரியும்
பூகம்பமாக...
சுனாமியாக!!