பாவக் கோடுகளுள்•••
ஒருவர் தலையில் சுமக்கும் அளவிற்கு இல்லாமல் போனாலும்•••••!
ஒருவர் தோளில் தாங்கும்
அளவுக்கு இல்லாமல் போனாலும் ••••!
ஒருவர் கைகள் தூக்கும்
அளவுக்கு இல்லாமல் போனாலும் ••••!
ஒருவர் மனது நிறையும்
அளவுக்கு கொடுங்கள் போதும் ••••!
வாயார மனதார வாழ்த்தும்
வாழ்த்துக்கள் நீங்கள்
தெரிந்தோ தெரியாமலோ
செய்த பாவக் கோடுகளுள்
ஒரு கோடு தன்னாலே
அழிந்துப் போகக் கூடும்••!