முன்னாள் காதலி - என் வானவில் நீயடி

எது முதல் காதல்?

எண்ணெய் கூட,
தேய்க்காத உன் தலைக்கு
அரைமணி நேர ஒப்பனை அவசியமா? - என
என் வீட்டு கண்ணாடி,
என்னை கிண்டல் செய்தது!

உனை பார்க்க ஆரம்பித்த நாட்களில்
என் முகத்திலோ
ஆயிரம் மலர்கள்,
சத்தமின்றி பூத்தது!

உன் பெயரை,
மார்பில் கிறுக்கி,
யாருக்கும் தெரியா வண்ணம்
குளித்த நாட்கள் ஏராளம்!

உன் கைகளை,
பிடித்த பொழுதே
என் ஆண்மையயை
உணர்ந்த தருணங்கள்!
எனக்கு மட்டுமே வெளிச்சம்!

'காதல்' என்று சொல்லியபோது
கெட்ட வார்த்தை போலே
நீ, உன் செவிகளை
கைகளால் சிறையெடுத்ததை
எப்படி மறவேன்?

பிரம்பால், என் கைகளில் வரைந்த
ஓவியத்தை,
உன் மழைத்துளியால்,
அழித்த நாட்கள் திரும்பிடுமா?

அந்த ஓவியனை
சத்தமின்றி நீ சபித்ததைதான்
நினைவுகள் அழித்திடுமா?

சொர்க்கத்திற்கு போக
விருப்பமில்லை!
உன்னுடன் பக்கத்தில் அமர்ந்தாலே
எனக்கு சொர்க்கம் தானே!

குட்டி பாவாடை!
கொஞ்சும் தமிழ்!
நேரான வகிடு,
நினைவில் வரும் சிரிப்பு!
நகத்தை செதுக்கிடும்
உன் நட்சத்திரங்கள்!
எனை கண்டதும்
உன் முகத்தில் மின்னல்!

எப்படி மறவேன்?

இன்றோ? எங்கோ நீ!
நினைவுகளுடன் நான்!
நீயும் அப்படித்தான்!

நீதான் என் முதல் காதலியா?

எழுதியவர் : Sherish Prabhu (6-Jul-16, 7:40 pm)
பார்வை : 3049

மேலே