மனசுக்குள்ளே மழைத் தூரல்

ஏன்டி என்னை நீயும் பார்க்குரே
என் நெஞ்சில் தீயை மூட்டுரே
கத்திப் பாயும் கண்ணுதான்
கொய்துப் போனதே என்னைத் தான்......


கிறுக்கேத்தும் பார்வையிலே
சுருக்குப் போட்டு இழுக்குரே...
காதலெனும் போர்வையிலே
என்னை மூடி வைக்குரே......


சருகுப் போல நானுந்தான்
வெயிலில் காய்ந்தேன் நாளுந்தான்...
உன் விழிகள் பார்த்தப் பிறகுதான்
உணர்ந்தேன் கருப்பும் அழகுதான்......

ஏன்டி என்னை நீயும் பார்க்குரே......

நிற்காமல் சுத்தும் நிமிட முள்ளாய்
சுத்தித் திரியும் பாதங்கள்...
உன்னைக் காணத் துடிக்கும் ஆசையில்
உறைந்து நிலையாய் நிக்குதே......


மதி யென்ற உன் முகம்
மலராது மனசும் கிடந்துத் தவிக்குதே...
மல்லிகைப் பூ வாங்கித் தான்
உனக்குச் சூட நினைக்குதே......


கருங்குழல் கைத்தொடவே
கன்னி மனம் அனுமதியுமோ?...
வாங்கிடாது எனைத் தான் ஏமாற்றுமோ?......

ஏன்டி என்னை நீயும் பார்க்குரே......

ஜன்னல் இல்லாத இதயத்தில்
உன்னால் தென்றல் வரக் கண்டேனே...
மின்னல் மீட்டும் உன் சிரிப்பாலே
உடையாமல் நானும் உடைஞ்சேனே......


கானல் நீர் போலத்தான்
நீ பேசும் மொழிகளும் ஆனதே...
தூரம் விலகும் நேரந்தான்
மௌனமும் ஆயிரம் மொழிகள் பேசுதே......


காதல் நாகம் தீண்டியதால்
மஞ்சமும் இமைகள் விரிக்குதே...
நெஞ்சமும் தூங்கிட மறுக்குதே......

ஏன்டி என்னை நீயும் பார்க்குரே......

எழுதியவர் : இதயம் விஜய் (6-Jul-16, 7:15 pm)
பார்வை : 244

மேலே