கஞ்சி ஊத்தி காப்பாத்த •••
குயவன் கண்ணில்
பட்ட களி மண்ணும்
குமரன் கண்ணில்
பட்ட புது பொண்ணும்
இரண்டுமே ஒன்னுல
ஒன்னு பொருந்துது
மிதிச்சி துவைச்சி
பக்குவப் படுத்தி
சட்டிப் பானையாவுது
அனைச்சி புடிச்சி
பக்குவப் படுத்த
புள்ளைய பெத்துதருது
காலத்துக்கும் கஞ்சி
ஊத்தி காப்பாத்த மண்
பாண்டமும் மனைவியும்
கடைசி வரை காக்குது