நிஜமாகத்தான் சொல்கிறேன்
நிஜமாகத்தான்
சொல்கிறேன்........!
என் சந்தன
சிந்தனையில்
குங்குமமாய்
அவளது
நினைவுகள்..........
மறந்தால்..
விபூதி எனும்
சாம்பல் தான்
நான்......!
நிஜமாகத்தான்
சொல்கிறேன்........!
இரண்டு வருட
காலண்டர்களை
என்னுள்
உள்ளடக்கி
வைத்திருக்கிறேன் ...
ஏனெனில்
அவள் பழகிய
நாட்களை
கிழிக்க மனமில்லை...
பஞ்சாங்கம் போல்
பாதுகாத்து
வருகிறேன்....!
நிஜமாகத்தான்
சொல்கிறேன்........!
என் கண்களின்
கடைசி பார்வை
வரை...
அவளுடன் வாழும்
காட்சிகள்
திரைப்படமாக
நகர்கிறது...
ஆகையால்
நான்
நகராமல்
சிலையாகி விட்டேன் .....!
நிஜமாகத்தான்
சொல்கிறேன்........!
நாங்கள்
பிரியப்போவதில்லை ...
காதலையும்
தாண்டி
ஒரு
கவித்துவமான
வாழ்வு இருக்கிறது.....
மரணத்தையும்
தாண்டி
ஒரு
ஜனனமான
சொர்க்கம்
இருக்கிறது....
அது
அவளுடன் வாழும்போது
மட்டும்
தான்......
நிஜமாகத்தான்
சொல்கிறேன்........!
பிறக்கும்போது
"அம்மா"
என்றேன்......
ஆனால்
இறக்கும் போது
அவளது
பெயரை
சொல்லித்தான்
இறப்பேன்.......!