பறவையான என் கவிதைகள்
பறவையான_என்_கவிதைகள்
என் கவிதைகள் எட்டிக் குதிக்கும்
தொடுவானம் தொடப் பறக்கும்
வரிசையாக வானில் பறந்து
கண்களுக்கு அழகாக காட்சி கொடுக்கும்
சில மரப்பொந்துகளில் ஒழிந்து கிடக்கும்
சில குட்டிகளுடன் கூடடைந்து இளைப்பாறும்
சில காத தூரம் இரை தேடி அலைந்திருக்கும்
சில குயில் குரலெடுத்து பாடியிருக்கும்
சில கழுகாய் கூர்ந்து கவனித்திருக்கும்
சில கூட்டத்துடன் கூட்டமாய் கத்திக்கொண்டிருக்கும்
சில மட்டும் ஏதும் கிடைக்காததால்
பாலைவனத்திலோ அடர்வனாந்தரத்திலோ
அனாதையாய் தவித்துக்கொண்டிருக்கும்
இன்னும் ஜனிக்காத கவிதைகளோ
இந்த உலகம் ஆள காத்துக்கொண்டிருக்கும்...