அவன் தந்த அந்த முத்தங்கள்
அன்று அவன்
தந்த முத்தங்கள்
இன்னும் என் உதரத்தில்
ஈரமாய் இருப்பதாய் உணர்கின்றேன்
இது என்ன மாயம்
அவை வெறும் முத்தங்கள் அல்ல
என்னைக் காக்கும் சின்னங்கள்
என்று உணர்கின்றேன்
அன்று சென்ற என் காதலன்
மீண்டும் திண்ணமாய் திரும்பிடுவான்
என்னையே மணம் முடிப்பான்
என்று ஒரு மனதாய் காத்திருப்பேன்
அதுவரை அவன் தந்த அம்முதங்கள்
என் உதாரங்களில் உணர்ந்தே இருப்பேன்
அவனாய் , அவனாய் அவன் மட்டுமாய்
ஆம் அவன் தந்த முத்தங்கள்
அந்த முத்தங்கள்
வெறும் முத்தங்கள் அல்ல
உடலால், உணர்வால்
உள்ளத்தால் ஒன்றிய
எங்கள் காதலுக்கு
உரிமைச் சின்னம்
என்னைக் காக்கும் சின்னம்
அவன் வரும் வரை
என்னுள்ளே உறையும் நினைவுச் சின்னம்
------------------------------------------------