மென் காதலின் மின் அழற்சிகளில்

ஒளிரா உதயமது
ஓய்வில்லா மேகம் மறைக்கும் வானமது
இருளாகிப்போகும் கிழக்கோடு
எத்தனை காதலன்கள்..

நகங்கள் என நினைத்து உரியோரால்
வெட்டப்பட்ட விரல்களை மறைக்க
வெறுப்பை உமிழ உத்வேகம் கொண்டு
வெந்தனலாய் உயிர் மரிக்க துடிக்கும்
எத்தனை காதலிகள்....

ஒளிய இடம் தேடி ஒவ்வாது
ஒழிந்தாலும் தேவலையென
ஒழுகிப்போகும் காதல்களை
உயிரோடு புதைத்து உருக்குலையும்
எத்தனை காதல்கள்....

கனவில் கற்பனையில் கவிதைகளில்
கட்டுக்கதைகளாய் காவியங்களாய்
குவித்து குவித்து வைக்கப்பட்டு
மனம் மரணித்து உடல் வெற்று ஜடமாய் இங்கே
எத்தனை காதலர்கள்...

ஒருதலையாய் சில உயிர் தரிக்க
இருதலையிலும் சில இயலாமையால் பின் வாங்க
முக்கோணக்காதல்களில் சில குத்து வெட்டுப்பட்டு
கவிழ்ந்து போனவை எவை எவை...

உயிரினும் மேன்மையாகி
உணர்வினில் மென்மையாகி
ஊன் உருகி ஓடாய்ப்போனது எவை எவை...

மெய்யெல்லாம் பொய்யாகி
ஊனையுள்ளேயே உருக்கிவிட்டு
உருவம் பாம்பாகி தோல் உறிக்கின்றதே
பார்வை வெறித்து விஷத்தை கக்க இங்கே எவை எவை...

பல கதைகள் கருவிலேயே கசிகின்றன
சில கதைகள் கருக்கலைகின்றன
வேறு சில கதைகள் கவிழ்ந்து விடுகின்றன
டைட்டானிக் என்பதெல்லாம் இனி ஒரு உதாரணமே.

எழுதியவர் : செல்வமணி (7-Jul-16, 2:01 pm)
பார்வை : 72

மேலே