வெளுப்பதெல்லாம் பாலல்ல
ஒருமுறை நேரில் பார்த்திருந்து பழக்கம் அதிகம் இல்லாவிட்டாலும்,அறிமுகமானவர் என்பதால் அவரது ஊருக்கு சென்ரிந்தேன் எனது அலுவலக வேலை விஷயமாய் .முதல் நாளிலிலே அன்பாய் வரவேற்று இனிய வார்த்தைகளை பேசினார்.அந்த இடத்தில் எனது மொபைல் வேலை செய்யாமல் போகவே அந்த நபர் உடனே ஒரு மைக்ரோசாஃட்வேர் மொபைலை தந்து இதை வைத்து கொள்ளுங்கள்,என்று கொடுத்தார் .பிறகு மற்றோரு நாளில் என்ன ஆனது என்று தெரியவில்லை .எனது மொபைல் வேண்டும் என்றார்,நானோ தந்து விடுகிறேன்,திரும்பவும் இங்கு வருவேன்,அப்போது நிச்சயம் தருவேன் தற்போது நான்எனது ஊருக்கான பயணத்தில் உள்ளேன் என்றேன் .பிறகு அந்த நபர் நான் வேலை செய்யும் உயர் அலுவலகத்தில் இப்படியாக புகார் கொடுத்திருந்தது, எனக்கு தெரிய வந்தது ,எனது மொபைலை அவர்கள் தர மாட்டேன் என்கிறார்கள், அது விலைமதிப்பானது, அவர்கள் ஏமற்றிவிட்டனர், தாங்கள் அவர்களுக்கு முறையிடுங்கள் என்றெல்லாம் .அந்த மொபைலின் பின் பக்கம் கூட உடைந்து இருந்தது,அது 4,000 க்கு கூட போகாது ,ஆனால் வேற ஒரு மொபைலின் பில்லை போலியாக காட்டி நாடகமாய் பேசியுள்ளது,பிறகு உயர் அலுவலகத்தில் இருந்து ஏராளமாய் செய்தி வந்தது எனது பெயரும் கேட்டு போனது .நான் மிகுந்த மன வலியோடு நான் இருக்கும் இடத்தில் இருந்து விரைவு போஸ்டில் அனுப்பிவிட்டேன்.இப்படியும் இலவசமாக கொடுப்பதாக கூறி உங்களை ஏமாற்றும் நபர்கள் அதிகம் எனவே ஜாக்கிரதை