மரம்.
மாலையில் வேலைக்குச் சென்றுவிட்டு,சம்பளம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால்..'அப்பா' என ஓடிவந்து கழுத்தை கட்டிக்கொள்ளும் மகள்..இன்று அமைதியாக ...படித்துக்கொண்டிருப்பதைக் கண்டு...ஏதோ சம்பவம் நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.அடுப்படியில் வேலைபார்த்துக்கொண்டிருந்த மனைவியை நோக்கி'என்ன?'என மவுன மொழியில் கேட்க...அவள்,'எனக்குத் தெரியவில்லை'என்பதுபோல உதட்டை பிதுக்கினாள்.என்னவா இருக்கும்....?..ஒன்றும் புரியாமல்...மகள் அருகில் சென்று "செல்லம்...ஏன் இன்னைக்கு சோகமா இருக்கீங்க...பள்ளியில் ஏதும் பிரச்சனையா?" எனக் கேட்டதும்...
"ம்...பள்ளியில் ஒரு பிரச்சனையும் இல்லப்பா...பள்ளிக்கு போற வழியில் ஒரு மரம் இருக்குலப்பா...நான் கூட அங்கே போய் வெயிலுக்கு போய் என் தோழிகளுடன் உட்காருவானே...அந்த மரத்த நாளைக்கு வெட்டப் போறாங்களாம்". என அவள் சொல்லி முடித்ததும்...அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.மகளின் கவலை புரிந்தது.நானும் அறிவேன்.அது ஒரு பழமையான மரம்..,அந்த மரத்தை வெட்டி எடுத்துவிட்டு..அந்த இடத்தில்..ஒரு மருத்துவமனை வரப்போவதாக..MLA சொல்லிக்கொண்டிருந்தார்...அப்போது சந்தோசமாக இருந்த அந்த செய்தி,மகள் அழுகையக் கண்டு..வருத்தத்தை அளித்தது,.
" என்னம்மா. ...அங்கே ஆஸ்பத்திரி வரப்போகுது..அதுக்குத்தான் மரத்த வெட்டப்போறாங்க..நமக்கு நல்லதுதானே"எனச் சொன்னதும்தான் தாமதம்..
"" என்னப்பா...நீங்களும் புரியாம பேசுறீங்க...மரம் நமக்கு எவ்வளவு உதவி செய்து தெரியுமா...அதுக்குமேல..அந்த மரத்துல நெறையா பறவை கூடு கட்டி குஞ்சி பொறிச்சு இருக்கு..மரத்த வெட்டினா அதுங்க எங்கே போகும்...பாவம்ல..."என்று சொல்லி முடித்துவிட்டு..கண்ணைக் கசக்கிக் கொண்டு...விம்மினாள்.அவளை ஆசுவாசப்படுத்தினேன்.
யோசித்தேன்..மரம் வெட்டுப்பட்டால்..இவள்.அதே நினைப்புடன்...சோகமாகவே இருப்பாள்...என்ன செய்வது..?யோசித்தேன்...!
..
அன்றைய சம்பள பணத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வெளியில் கிளம்பினேன்.
மறு நாள் வேலை விட்டு,வீட்டுக்குள் நுழைந்ததும்..ஓடி வந்து கழுத்தை கட்டிக்கொண்டு.."அப்பா...இன்னைக்கு பள்ளிகூடத்துக்கு போகும் போது ,அந்த மரத்த சுத்தி ஒரே கூட்டம்...என்னன்னு போய் பார்த்தா...அந்த மரத்துல சாமி குடியிருக்காம்...மரத்த சுத்தி சேலை கட்டி,சந்தனம் பூசி,குங்குமம் வச்சு...எல்லோரும் சாமி கும்பிட்டாங்க அப்பா..ஐயர் கூட பூஜை பண்ணிக்கிட்டு இருந்தார்"என முகத்தில் சந்தோசம் பொங்க சொல்லிக்கொண்டிருந்தாள்.
மனைவியோ.."என்னங்க இது உங்க வேலையாத்தான் இருக்கும்..என்ன பண்ணுனீங்க?"எனக் கேட்டதும் ,நான் நேத்து ராத்திரி வெளியே போய்..அடுத்த தெருவுல இருக்குற மீனாட்சி பாட்டியைப் போய் பார்த்து..,ஆயிரம் ரூபா கையில் கொடுத்துவிட்டு..செய்ய வேண்டியத சொல்லிவிட்டு வந்துட்டேன்.ஆனா ,மீனாட்சி பாட்டி ..நான் சொன்னதைவிட அருமையாக செய்துவிட்டார்கள்..,!ஆயிரம் ரூபா செலவு ஆனாலும் மகளின் சந்தோசத்துக்காக..,இனி எவனாவது அந்த மரத்துல ,அரிவாளை..வைப்பானா?"
!
..முற்றும்
'