10 செகண்ட் கதைகள் - இவரை உங்களுக்குத் தெரியுமா

ஒரு முறை
ஒரு நீதிமன்றத்தில்,
ஒரு வழக்கு ஒன்று
ஒரு நீதிபதி முன்பு வந்தது.,

ஒரு மூதாட்டி,
சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.. ]

●அரசாங்க வழக்கறிஞர்,
மூதாட்டியை நோக்கி,
“திருமதி.மரகதம்,
என்னை உங்களுக்குத் தெரிகிறதா?”
என்று கேட்டார்..

●அதற்கு மூதாட்டி,
“உன்னைத் தெரியாமலா, பிரகாஷ்?
சின்ன வயதிலிருந்தே
உன்னை எனக்குத் தெரியுமே..

●ஆனால்,
பெருமையாக சொல்லும்படி
ஒன்றுமில்லை!
நீ பொய் சொல்கிறாய்,
மனைவியை ஏமாற்றுகிறாய்,
பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின்
அவர்களை தூக்கி எறிகிறாய்,
உன்னை பெரிய மேதாவி என்று
நீயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்!

●ஆகவே,
உன்னை எனக்கு மிக மிக
நன்றாகவேத் தெரியும்!” என்றார்..

●மூதாட்டியின் பதிலில்
வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்!

●எப்படி வழக்கைத் தொடர்வது
என்று புரியாத குழப்பத்தில்,
அரசாங்க வழக்கறிஞர்
எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி,

●“திருமதி.மரகதம்,
இவரை உங்களுக்குத் தெரியுமா?”
என்று கேட்டார்!

●அதற்கு அம்மூதாட்டி,
”இதென்ன கேள்வி,
தம்பி ரமேஷை எனக்கு
பல வருடங்களாக நன்றாகத் தெரியுமே!

●அவன் ஒரு சோம்பேறி,
நல்லது சொன்னால் கேட்க மாட்டான்,
நிறைய குடிப்பான்,
அவனுக்கு யாரிடமும்
நல்லுறவு கிடையாது,
சட்டத்தை பற்றி
ஒரு எழவும் தெரியாமலேயே
வக்கீலாகி விட்டான்,
அவனுக்கு மூன்று பெண்களிடம்
தொடர்பு இருக்கிறது,
அதில் ஒருத்தி உன் மனைவி”
என்று கூறியதில்
ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல்
மூர்ச்சையாகும் நிலைக்கு
போய் விட்டார்..

●அவசர அவசரமாக,
இரண்டு வழக்கறிஞர்களையும்
தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி,

●மிக மெல்லிய குரலில்,

●“உங்கள் இருவரில்
எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம்
‘என்னைச் சுட்டிக் காட்டி
இவரை உங்களுக்குத் தெரியுமா’
என்று கேட்டால்
நிச்சயம் அந்த ஆளை
தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்”
என்றார்..

எழுதியவர் : செல்வமணி (7-Jul-16, 11:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 279

மேலே