பத்து செகண்ட் கதைகள்

தாகம் தணிக்க தண்ணீரை
தேடி ஓடுகிறான் இளநீர் வியாபாரி

கனவு காட்சியில்….
நிர்வாணமாய் பெண்!
பதறினான்
பார்வையற்றவன்

சுவற்றில் கிறுக்கிய குழந்தையை
மொத்திவிட்டு புறப்பட்டாள் பள்ளிக்கு
பூங்கோதை
டிராயிங் வகுப்பெடுக்கவே

எழுதியவர் : கே. அசோகன் (8-Jul-16, 8:47 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 269

மேலே