நாணும் நிலவு
வானுக்கு சொந்தமான நிலவை-வான் நிலவை
இன்று பிடித்து நிறுத்தவா பெண்ணே உனக்கு முன்னே!
கிழக்கில் தோன்றிய சூரியன் வந்து
மேற்கில் வீழ்ந்தப் பின்னே
விண்ணை நோக்கி நீதான்
நிமிர்ந்து பாரடிக் கண்ணே!
வெண்நிலவு ஒன்று வந்து
நாணி நிற்கும் உன் முன்னே!
அன்று என்னைக் கண்ட போது
நீ நின்றது போன்று...!