அத்தன் அவன் திருப்பாதம்

மாதொரு பாகனின்
கால் சிலம்படி பற்றி
நல்லார் ஒருவரால்
பல்லோரும் பயனுரவரென
மனத்தகத்து தீவினை அகற்றுவோம்

பொன்னார் மேனியன்
கைத்தலம் பற்றி
காதறுந்த ஊசியும்
கடைநிலை வாராதென்று
மனக்கவலை மாற்றுவோம்.

கங்கையை சடையிலணிந்து
மங்கையை இடப்பக்கம் கொண்டு
மண்ணுபுகழ் சிவனவன் திருத்தாள்
நினைந்து ,உண்மையொன்றே பகர்தல்
உயர்வுக்கு வழியென்று கொள்வோம்.

பித்தனவன், சுடுகாட்டு
சாம்பல் மேனியன்,
மூவர்க்கும் முதல்வன்,முக்கண்ணன்
முகமது எழில் கொண்டு
முழுமதி வதனத்தில் பிறை கொண்ட
அத்தனவன் அருள் பெறவே
அவன் திருப்பாதம் பணிவோம்.

எழுதியவர் : arsm1952 (9-Jul-16, 12:50 pm)
பார்வை : 169

மேலே