சாதி - என் தமிழின்பார்வை
🤔சாதி🤔
என் தமிழின் பார்வை
எண்ணம் மற்றும் எழுத்து :மருதுபாண்டியன்.க
அவ்வை கொஞ்சிய தமிழே
இனிது இனிது என திகட்டாத
சுவை இதுவோ -குழந்தை
தாயைக்கொஞ்சும் மொழியென எழுதிவிட்ட முக்கால சுவடி கொண்டாய்!
அவ்வைசிந்தைக்கு பொருள் கொடுத்த வெறும் மொழியெனக் கூறிவிட்டார்களோ தமிழை-அன்று ?
வள்ளுவன் மெய்பித்தான் நம் தமிழ் வெறும் மொழிமட்டுமல்ல -அவள் தந்த சிந்தை திருக்குறளென எங்கும் ஒலிக்கிறது உலக பொதுமறையென!!
பாரதி கவிகொண்ட என் தமிழே
பல காலம் கண்ட கடவுளென அவன் உரைத்த பொருள்
ஆயிரமுண்டு!!!
பல முகம் கொண்டு என் தமிழ்த்தாய் உரைத்தாளே
"சாதிகள் இல்லையென "
அவ்வையின் நல்வழி
பாரதியின் கவிதையென பல உண்டு
அவர்கள் சிந்தைக்கு பகுத்தறிவு பாலை ஊட்டி!!!
இன்றும் அவள் ஊட்டும் பகுத்தறிவு பாலை அருந்த மறுக்கும் அவள் தமிழ்குழுந்தைகளாய் -நாம்!!!?
தாய் பேச்சை கேட்கும் குழந்தைகளேயே அனைவருக்கும் பிடிக்கும் -
"சாதிகள் இல்லையென்போம் "தமிழ்த்தாயின் குழந்தைகளாக!!!!