என்ன ஆச்சு எனக்கு

ஏதோ எழுதிட பேனா எடுத்தேன்
கைகள் எனை மறந்து
கிறுக்கியது உன் பெயரை....
எங்கோ கடந்து போக
வெளியே வந்தேன்
கால்கள் மெய் மறந்து
நின்றது உன் வீட்டருகில்..
யாருக்கோ போன்
செய்ய எண்ணை அழுத்தினேன்
உன் குரல் கேட்டது...
யாரோ அழைத்தால்
உன் பெயரை
விரும்பியே திரும்பினேன்....
எங்கே நீ என்று
யாரேனும் கேட்டால்
என் இதயத்தை காண்பிக்கிறேன்
என்ன ஆச்சு எனக்கு....

எழுதியவர் : கிரிஜா.தி (9-Jul-16, 2:31 pm)
பார்வை : 134

மேலே