உன்னக அழகில்

இவ்வுலகம் மட்டுமல்ல
இவ்வண்டம் முழுமைக்கும்
நீதானே எனக்கழகு
அதற்காக காதலிக்க
நான் ஒன்றும்
முக அழகை ரசிக்கும்
சாதாரண மனிதன் அல்ல
பார்த்ததுமே உணர்ந்துவிட்ட
உன்னக அழகில்
மயங்கிவிட்ட
உன் துணைவனும் நானாவேன்
வீழ்ந்தேனே உன்னக அழகில்
இனி வாழ்வேனோ உன்னுடனே
என் வாழ்வு முழுமைக்கும்

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (9-Jul-16, 4:20 pm)
Tanglish : unnaka alakil
பார்வை : 73

மேலே