காதல் வலி

அவள்

இரவினில் பெய்த மாமழை - யாரும்
இரவாமல் பெய்த பூமழை

பகலவன் பதுங்கி எழும் மாமலை - ஊரில்
பூப்பெய்தி ஒதுங்கிவரும் பூமாலை

பனித்துளி அமராத தாமரை - வானில்
மணித்துளி அகலாத வான்பிறை

அமுதம் கடையாத பாற்கடல் - இன்னும்
குமுதம் குறையாத நூற்கடல்

மயங்க மறுக்கும் மாதுளை - மனதில்
கத்தியின்றி போட்டுவிட்டாள் மா துளை

ஏற்க மறுப்பதேன் காதலை - நீ
விரும்புகின்றாயோ என் சாதலை

எழுதியவர் : குமார் (9-Jul-16, 6:49 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 916

மேலே