கத்தி எடுத்து காதலை தேடாதே -கங்கைமணி

கண்டவனெல்லாம்
காதலென்றவார்த்தையை
கண்டுகொண்டதன் விளைவுதான்
கத்தியெடுப்பது !

காவிய காலத்தில்...காதல்....
கண்ணகியை உலகறியச்செய்தது,
மாதவியின் மதிப்புயரச்செய்தது.!

இது ..கலியுகம்!
காமம் கலந்ததனால் ...
காதல்., கத்தி எடுக்கிறது-பல
கண்ணகிகளின் கழுத்தை அறுக்கிறது!!...

ஆணாதிக்கம் -அவளை
ஆட்டிப்படைக்கிறது
அமிலம் வீசி அவள்.,
அழகை சிதைக்கிறது !
அவள் மேல் ஆத்திரம் பிறக்கிறது
அன்பை ….
அடியோடு எரிக்கிறது !

எதையும் எதிர்பாராமல்
அர்ப்பணிப்பதே காதல்....
அழிப்பதல்ல!...
கத்தி எடுத்து காதலை தேடாதே
கருவிழி இழந்தால்
காட்சிகள் கிடையாதே!!...
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (8-Jul-16, 1:31 pm)
பார்வை : 328

மேலே