ஏன் காதலே இப்படி
நெஞ்சமென்னும் கூட்டில்
நீங்காத சிறையில் இருந்தவளே -
வஞ்சகமாய் வசைமொழிந்து
வாசல் தாண்டி போவாதேனோ ?
இருதய கோபுரத்தினுள்
எந்நேரமும் அர்ச்சித்தேன் உன்னை -
இருந்தும் துன்பத்தை நீ தந்து
துயரத்தில் துடிக்கவிட்டாய் ............
உலகத்தை மறந்து
உன்னையே நினத்தவனின்
உணர்வுகளை கொலைசெய்ய
எப்படித்தான் துணிந்தாயோ ............
சிரிக்கத்தான் முயல்கிறேன்
இருந்தும்முடியாமல் அழுகிறேன்
ஏக்கத்தின் சுமையை
இறக்கிவைக்க முடியவில்லை ...........
விடிந்தும் ,
இருட்டு உலகத்திலே
வாழும் குருட்டு மனிதனைப்போலே
குறுகிப்போனதடி என் வாழ்க்கை ...........
இணையாய் துணையாய்
ரசித்து நடந்த பாதைகள் எல்லாம்
பாதங்களை சுடுகின்ற
நெருப்பு தடங்களாயிற்றே ..............
அந்தரங்கத்தை தேடாத
அன்பை தேடியவனின் கண்ணியகாதலுக்கு
காதலியே ,
கருப்பு கொடிதான் நீ தந்த பரிசோ ...........
கடமைக்கு காதல்தன்னை
விதைத்து சென்ற உன்னிடம்
இனி கருணையை எதிர்பார்த்தால் -
கல்லும் கூட தோற்றுப்போகும் ............
பொழுதுபோக்காய் நாள்கடத்தி
பொய்யாய் நேசித்தவளே
உண்மையான நேசத்தின் ஆழத்தை
உணர்ந்துகொள்ள எப்படி முடியும் ...........
தேவைக்காக பார்வையின் பரிசத்தை
மாற்ற தெரிந்த உனக்கு
பரிகாசம் செய்வதில்
பாவமென்ன வந்துவிடப்போகிறது ...........
தனக்குத்தான் இவள் என்று
தப்புக்கணக்கு போட்டு
நினைவாலே வாழ்ந்தவனின்
நிஜ வாழ்க்கைதான் கேள்விக்குறி ..............
எத்தனையோ இன்னல்களை
ஏளனம் செய்த என்மனம்
உன்னுடைய பிரிவை மட்டும்
ஏற்கத்தான் மறுக்கிறது .............
இருந்தும் இன்றைக்கும்
காத்திருக்கிறேன் உண்மை காதலனாய் .........