உயிர் வலி

(சுவாதியின் கதறல் கற்பனை). ஆசை கனவெல்லாம் அடியோடு அழிந்தது. பேசமுடியாமல் என் உயிர் பிரிந்தது. விட்டுபோன அப்பாகூட வீடுபோய் சேரவில்லை. வெட்டுபட்டு துடிக்கின்றேன் காப்பாத்த யாரும் இல்லை. சற்றுநேரம் முன்புவரை தெரியாம போச்சே,.. கொட்டும்இந்த குருதியால போகுது என் மூச்சே... சுத்தி மனிதகூட்டம் கத்தி,கத்தி பார்க்கிறேன். குத்திக்கொல்லும் அவன காரணத்தை கேட்கிறேன். இருகண்ணும் மூட. இரத்தம் ஆறாய் ஓட. அரக்கன் அவனும் எட்டிநடை போட.. வேரோடு சாய்ந்துவிட்டேன் நானும். அம்மா யாரும் என் பக்கத்தில் காணம்... வலியில துடிக்கிறேன். வழிஇல்ல தவிக்கிறேன். பெண்ணாக பிறந்ததை வெறுத்து போகிறேன்.. கல்நெஞ்ச கயவனே உன்னால் சாகிறேன்...

எழுதியவர் : கு.தமயந்தி (10-Jul-16, 7:33 pm)
Tanglish : uyir vali
பார்வை : 220

மேலே