முகநூலில் என் நினைவு
முகம் பாராமல் நான் இங்கே...
முகநூலிலே நட்பாய் நான் தந்திட..
நட்பினை ஏற்காத பல நாளும்..
என்னையறியாமல் என்னுள்ளே..
எண்ணற்ற ஏக்கங்கள்...
நட்பினை ஏற்ற நொடி முதல்..
எந்நொடி நீ வருவாய் என் குறுஞ்செய்தியில்..
இமை திறந்து காத்திருக்கிறேன்...
காலம் கடந்து என் கடவுச்சொல்லை பதிவிட்டு...
நலமறிவாயா என நினைத்ததுண்டு...
காலக்கோட்டில் என் நினைவுகளை பகிர்ந்தும்...
என் பிம்பம் உன்னை தொட்டிட..
விழி திறப்பாயா...
விரல் இடுக்காலே விருப்பம் தருவாயா...
உன் நினைவாய் கருத்தை சொல்வாயா..
காத்திருக்கிறேன் அனுதினமும்...
புரியாமல் வெளியேறுகிறேன் அனு தினமும்..
உன் நினைவை என்னுள் சுமந்து..