மனித காதல்

என்...

தூக்கம்
ஒருவிழி தூங்குவது
மறுவிழி ஏங்குவது...


இதயம்
நான்கு அறைகளும்
சண்டையிடுவது...

இமைகள்
அவளை பாதுகாப்பாக
வைப்பது...

கண்கள்
தெளிவாக படமெடுப்பது...

மார்ப்பு
அவள் சாய ஏங்குவது...

கன்னம்
அவள் இதழால்
வண்ணம் தீட்டுவது...

உதடு
அவள் பற்றி உச்சரிப்பது..்

மடி
அவள் தலை சாய்த்து
உறக்குவது...

கைகள்
அவள் கைகள் கோர்ப்பது...

உடல்
அவளை நினைத்து
நித்தம் நித்தம்
வெயில் படாமல்
பனிக்கட்டியாய் உருகுவது...

என் வாழ்க்கை
அவள் வந்து
அழகிய சிலையாய்
உளியில்லாமல் செதுக்குவது...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (11-Jul-16, 11:15 pm)
Tanglish : manitha kaadhal
பார்வை : 103

மேலே