பார்வையால் விளையாடும் கள்வன்

தன்னந்தனியான காட்டினிலே
என்னை தவிக்கவிட்டான் ஒரு பாவியடி
இந்த பாவியில்
பா என்றால் பார்வைதான்
வி என்றால் விளையாட்டு
அவன் பார்வையால் விளையாடும் கள்வனடி
அவன் பார்வையால் எனை வெல்லும் மன்னனடி
அவன் குழலூதூம் இசையாலே
மகிழ்விப்பான் மனதைத்தான்
அவன் கூட இருந்தாலே போதுமடி
எனக்கு வேறென்ன இவ்வுலகில் வேண்டுமடி

என் தோழி நீயும்தான் கேளடியே
என்னை அவனும்தான் படுத்திய பாட்டினையும்
ஒருநாளில் வரச்சொன்னான்
நான்சென்று போய் நின்றேன்
அவனைகாணவில்லை நெடுநேரமடி
நான் காத்திருந்தேன் காத்திருந்தேன்
காத்துக்கொண்டே இருந்தேன்
அவன் காணோமடி வரக்காணோமடி
அவனை காணமல் கோபம்தான்
காத்திருந்த சோகம்தான்
என் நிலையோ பெரும்பாவமடி
அவன் எங்கிருந்தும் வரக்காணோமடி
இனி காத்திருந்தால் பயனில்லை
காலம்தான் போகுமென்று
என் காலெடுத்து வைத்தேனே போவதற்கு
உடனே அவன் எங்கிருந்தோ வந்தானே
எனைத்தொட்டு சிரித்தானே
மாயமடி அவன் மாயனடி
எனக்கு வந்ததடி பெருங்கோபமடி
அவன் என் வதனத்தைக் கண்டானாம்
அதில் மயங்கி நின்றானாம்
நான் திரும்பியதும் தெளிந்தானாம்
உடன் வந்து நின்றானாம்
இதற்குமேல் நான் என்ன சொல்வதடி?
அவன் என்னை மயங்க வைப்பதில்
பெரும் கள்வனடி

எழுதியவர் : வென்றான் (11-Jul-16, 11:26 pm)
பார்வை : 140

மேலே