பித்தனாகி போனேன்
அவள் வீசி
எறிந்த உடைகள்
அழகிய ஓவியமானது
அவள் பேசி
போன ம்ம்
மிகச்சிறந்த குறுங் கவிதையானது
அவள் எழுதி
போன வார்த்தைகள்
காவியமானது
அவள் நடந்து போன
சாலைகள்
தங்க வயலானது
அவள் வீட்டின்
வாசல்
சொர்க்க வாசலானது
அவள் சூடிக் கொண்ட
பூக்களுக்கு
ஆயுள் நீண்டது
அவள் பாடி
போன குளத்தங்கரை
குயில்களின் கூடாரமானது
அவள் பறித்து
போன மருதாணி
வைக்கும் முன் சிவந்தே போனது
அவள் பார்த்து
போன கண்ணாடி
பேசும் வரம் கேட்டது
அவள் சுவைத்து
போன இனிப்பு
சுவை கூடி போனது
அவள் பார்த்து
போன காட்சிகள்
இயற்கை ஆகி போனது
அவள் காதலித்து
போன நான் மட்டும்
பித்தனாகி போனேன்!