அந்தியில் ஒரு மஞ்சள் நிலவு

அந்தியில் ஒரு மஞ்சள் நிலவு
அந்தரங்கத்தில் ஒரு சுந்தரக் கனவு
விந்தை செய்யும் உன் விழியின் அசைவு
சிந்தையில் சந்திரனின் சாத்திரம் பேசுது !

----கவின் சாரலன்
நான் மிக விரும்பும் வெண்பா வடிவில் ----

அந்திப் பொழுதில் ஒருமஞ்சள் தண்ணிலவு
அந்தரங் கத்தில் ஒருசுந் தரக்கனவு
விந்தை புரியும் விழிகளின் மின்னசைவு
சந்திரனின் சாத்திரம்பே சும் !

--ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

அந்திப் பொழுதில் ஒருமஞ்சள் தண்ணிலவு
அந்தரங்க சுந்தர மென்கனவு --- சிந்தையில்
விந்தை புரியும் விழிகளின் மின்னசைவு
சந்திரனின் சாத்திரம்பே சும் !

---ஒரு விகற்ப நேரிசை வெண்பா
இன்னிசை நேரிசை வித்தியாசத்தை ஆர்வலர்கள்
கூர்ந்து கவனிக்க . முயலுக .


ஆர்வலர்கள் கவனிக்க முயலுக.
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-16, 9:43 am)
பார்வை : 266

மேலே