நன்றி பாக்யா வார இதழ் அட்டைப்படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி
நன்றி பாக்யா வார இதழ் !
அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
அதிக ஒப்பனைகள் இன்றி
அடுத்து வீட்டுப் பெண் போல
இருப்பதாலும்,
படப்பிடிப்பு நடந்திட்ட கிராமத்திற்கு
கழிவறை கட்டிட உதவியதாலும்
பிடித்தது பலருக்கு !
வீராதி வீரர்களும்
சூராதி சூரர்களும்
சுந்தரியின் பார்வைப் பட்டு
சுருண்டு விட்டனர் !
துப்பாக்கி கம்பு ஆயுதங்களை
வீழ்த்த வல்ல ஆயுதம்
வஞ்சியின் காந்த விழிகள் !
வேண்டாம் ஆயுதம்
வேண்டாம் வன்முறை
மனிதன் கூடி வாழ வேண்டும்
மோதி வீழ்தல் அழகன்று !
வேடமணிந்து பயணம்
நடிக்க மேடைக்கு
நடிகர்கள் !
.