திருவிழா கொண்டாட்டம்
காப்பு கட்டியாச்சு
காவி உடை அணிந்தாச்சு
வேண்டுதல முன்வச்சு
விரதம் தொடங்கியாச்சு
காப்பு கட்டுனதுமே
கருமேகம் கூடிடுச்சாம்
வருகிற செவ்வாய்க்குள்ள
வறண்ட கண்மாய் நிரம்பிடுமாம்
உறவுக்காரன் செத்தா கூட
ஊருக்காரன் போகமாட்டான்
காப்புத்தடைய மீறினா
காளியம்மா கொதிச்சிடுவா
அம்மன மகிழ்விக்க
ஆண்டுக்கொரு திருவிழா
அனைவரும் வருக
அம்மன் அருள் பெருக
கவிதை வரிகளுடன்
கதர் வேட்டி கட் அவுட்
செல்போன் சிங்கங்கள்
செலவழிக்கும் தங்கங்கள்
வயசானவங்க ஆடுன சாமி
வயசுப்பசங்களையும் ஆடச்சொல்லுதாம்
விபூதியில காய்ச்சல் போகுதாம்
விஜயகாந்த்தான் முதலமைச்சராம்
திருவிழா தொடங்கியாச்சு
தினந்தோறும் கொண்டாட்டம்தான்
நிறைவு நாள் திருவிழாவில்
நீயா நானா மல்லுக்கட்டு
குமுதா ஹேப்பி அண்ணாச்சி!