சலக்கு சலக்கு
![](https://eluthu.com/images/loading.gif)
அடியே சலக்கு, சலக்கு எங்கடி போயிட்டே? இங்கெ வாடி.
@@@@@
யாரப் பாட்டிம்மா கூப்படறீங்க?
@@@@
வாடியம்மா பச்சவல்லி. எம் பேத்தி சலக்கைத்தாண்டி கூப்படறேன்.
@@@
பாட்டி அவ பேரு சலக் இல்ல பாட்டிம்மா. ஜலக்.
####
ஏண்டியம்மா இப்பிடியுமா ஒரு பொம்பளைப் பிள்ளைக்குப் பேரு வைக்கறது?
#####
பாட்டிம்மா எம்.ஜி. ஆர் நடிச்ச ஒரு படத்தில கூட ”சலக்கு சலக்கு சிங்காரி” -ன்னு ஒரு பாட்டு பாடுவாரு டி.எம். சௌந்தரராஜன்.
நாங்கூட அந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறென். நானும் உங்க மருமககிட்ட ”என்ன உங்க பொண்ணுக்கு ஜலக் -ன்னு பேரு
வச்சிருக்கறீங்களே?”ன்னு கேட்டேன். அந்தப் பேர உங்க மகந்தான் உங்க வச்சாராம். அவரு ஜலக் ஜலக்-னு ஆரம்பிச்சு
நீளமா பேருள்ள உள்ள இந்திப் படத்தை படிச்சிட்டு இருக்கற காலத்தில பாத்தாராம். அந்த வார்த்தையை ஞாபகமா வச்சிருந்து
உங்க அழகான பேத்திக்கு அந்த ’ஜலக்’-ங்கற இந்தி வார்த்தையைப் பேரா வச்சிட்டாராம்.
@@@
அதென்னமோ போடியம்மா. நம்ம தமிழ்ல நல்ல பேருங்களே இல்லாத மாதிரி எல்லாம் பிள்ளைங்களுக்கு அர்த்தம் தெரியாத,
வாயிலெ நொழையாத இந்திப் பேரையெல்லாம் வச்சிடறாங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க. பிற மொழிச் சொற்களின்/பெயர்களின் பொருள் அறிய. தமிழர்களில் 98% பேர் தங்கள் பிள்ளைகளுக்கு இந்தி/வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதையே பெருமையாக நினைக்கிறார்கள். அவர்களில் அந்தப் பெயர்களின் பொருள் அறிந்தவர்கள் 20% கூட இருக்குமா என்பதே சந்தேகம் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
झलक {Jhalak} = GLIMPSE, Glance (Noun) = கண நேரக் கண்ணோட்டம் = a momentary sight