ஏன் கேட்க மாட்டேங்கிறார்

சந்தேகப் பட்டது சரிதானே :)
''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?''
''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்தானே !''
உலகப் புகழ் அழகியை தெரியாமல் போகுமா :)
''நம்ம சச்சினை யாருன்னே தெரியாது என்கிறார் ஷரபோவா ,ஷரபோவாவா அது யாருன்னு சச்சின் ஏன் கேட்க மாட்டேங்கிறார் ?''
''உலகப் புகழ் மாடலை தெரியாதுன்னு சொன்னா, ஆம்பளைக்கு அழகில்லையே ,அதான் !''

எழுதியவர் : ஜோக்காளி (11-Jul-16, 9:35 pm)
பார்வை : 161

மேலே