சிவ்வு சிவ்வுக் கண்ணா

ஏண்டியம்மா பக்கத்தூட்டு சிலம்பொலி என்னடி உங் கொழந்தைய சிவ்வு சிவ்வுன்னு கொஞ்சிட்டு இருக்கற?
@#@
பாட்டிம்மா என்னோட கணவர் எங்க கல்யாணத்து முன்னாடி வட இந்தியாவ்ல வேல பாத்தவரு. அவுருக்கு இந்தி நல்லாத் தெரியும். ஒரு பெரிய நிறுவனத்தல மேனேஜரா இருக்காரு. அவுங்க அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். ரண்டு பேருமே தமிழ்ப் பேராசிரியர்கள். என் வீட்டுக்காரரு தீவிர சினிமா ரசிகர். அவரு பேரு கதிரொளி. அந்தப் பேரா ப்ரகாஷ்-ன்னு மாத்திட்டாரு. எம் பேர ஷிவானி-ன்னு மாத்தச் சொல்லறாரு.
எம் பையனுக்கு சிவா-ன்னு எம் மாமனாரும் எங்கப்பாவும் பேரு வச்சாங்க. அவரு அந்தப் பேர ஷிவ்-ன்னு மாத்தப் போறாராம்.
@%@
ஏண்டி சிலம்பு உம் பபையம் பேர சிவ்வுன்னு மாத்தச் சொல்லறாரு?
@#@
பாட்டிம்மா பெரிய தொழிலதிபர் சிவ நாடார் அவுரு ஷிவ் நாடார் -ன்னு மாத்திட்டாராம். அதே மாதிரி சிவா-ங்கற எங் கொழந்தை பேரை இனிமே ஷிவ்-ன்னுதாங் கூப்புடுனுமாம்.
@%@
ஏண்டி சிலம்பு அவரு ஆசப்படற மாதிரி உம் பையன சிவ்வுன்னே கூப்படறது.
@#@
நானும் தமிழ்ல டாக்டர் பட்டம் வாங்கினவ. கல்யாணத்து முன்னாடி மூணு வருசம் தமிழ்ப் பேராசியரா வேல பாத்திருக்கேன். எனக்கென்னவோ ஜ,ஷ, ஹ, இதெல்லாம் உசுசரிக்கறதுக்கு சுத்தமா பிடிக்கல. அதனால நான் பையன சிவ்வு -ன்னு கூப்புடுவேன்.
@#@
சரிடி சிலம்பு உங் கொழந்தைய நீ சிவ்வு -ன்னு கூப்புடு சவ்வுன்னு கூப்புடு. எனக்கென்னடி வந்துச்சு?
@@@@@@@@@@@@@@@@@@@@@
கற்ற தமிழர்களே இந்திப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதில் தீவிரம் காட்டுகிறார்கள் தமிழின் சிறப்பை அறியாமல். அதைச் சுட்டிக்காட்டவே இப்படைப்பு.

எழுதியவர் : மலர் (13-Jul-16, 12:03 am)
பார்வை : 215

மேலே