வலிகள் போதும் வழியை சொல்லு

நீ தந்த
வலிகள் சுமந்து
நொந்து
போனேன்.....இனி
வேண்டாம்....வேண்டுமே
எனக்கொரு
வழி.....!!

வேதனைகளை
மட்டுமே
சுமந்து
வாழ்ந்த மனம்
வேண்டாமே
இந்த வாழ்வென்று
வார்த்தையை
சொல்லி போகிறது.....!!

சொல்லாத
காதலும்
சாகடிக்கும்
சொல்லிவிட்ட
காதலும்
அதையே
செய்யும்.....வாழமுதல்
வாழ்ந்த
முதல்
வாழ்க்கை....வாழ்வை
தொலைத்து
அழுகிறதே......!!

பாவங்கள்
எல்லாம்
சாபம்
என்றாகி....இறக்கை
கட்டி
வந்து...... என்னைத்
தாக்குதே......
தாயோடு சேயும்
சேர்ந்திருக்க
தந்தை
இவன் இங்கே
தனித்திருக்க.....
காலம் செய்த
பிரிவினை.....எதனாலே
கடவுளே
உனக்கும் எனக்கும்
பிரிவினை.....????????

வஞ்சிக்கும்
எண்ணமெல்லாம்
இருந்ததில்லை
எனக்கு.....ஆனாலும்
வஞ்சிக்கப்பட்டேன்
அளவில் கைவிரல்கள்
ஒன்றல்லவே
என்று ஆறுதலும்
கொண்டேன்.....பழியை
வாழ்க்கை மீது
போட்டுவிட்டு......!!

கல்வியை
தொலைத்தவன்
வாழ்க்கையை
தொலைப்பான்
என்பது
நிதர்சனம்.....
பாதியில்
தொலைத்த படிப்பால்
வாழ்க்கையில்
பாதிப்புக்களே
அதிக
பக்கங்களை
எடுத்துக்கொண்டது.....!!

காதல்
தவறில்லை......
தவறான
சூழ்நிலையில்
கைப்பிடித்ததே
காலச்
சிக்கலுக்கு
காரணமோ
என்று
கேள்விகளை
கேட்டுக்கொள்கிறேன்.....!!

காதல்
வேண்டாம்
அது தரும்
கனவும்
வேண்டாம்....
சுகம்
வேண்டாம்
சோகமும்
வேண்டாம்......
நினைவுகள்
வேண்டாம்
நிச்சயமாய்
காதல்
வேண்டாம்......

காதலுக்கு
காணிக்கை
கண்ணீர்த்
துளிகள்
தான்.....!!!

நெஞ்சம்
நனைத்த
காதல்
நிஜமாய்
நீதான்
தஞ்சமென
நினைத்த
காதல்.....எல்லாமே
நீர்த்துப்
போனது......நிழல்
மனிதர்களின்
நிஜங்கள்
பின்னால்......!!!!!!!!!!!

எழுதியவர் : thampu (13-Jul-16, 2:56 am)
பார்வை : 628

மேலே