எதிரொலிகள்

எதிரொலிகள்
===========================================ருத்ரா

உன் கண்களில்
யார்
இந்த ரங்கோலியைப்போட்டார்கள்?
தெருவையே அடைத்து
ஒரு உலகையே பரப்பி
என் கனவுகளில்
அதில் கம்பி இழுத்திருக்கிறார்கள்.
என் இதயம் பிசைந்து
வண்ணம் குழைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு இமைச்சிமிட்டல்களாய்
அவர்கள் வந்து அமைத்த
இந்த கற்பனை மண்டலங்களில்
என் துடிப்புகளின்
நரம்புக்கூட்டமும் அல்லவா
இப்படி பரந்து கிடக்கிறது.

உன் பார்வைகளின்
கொடிப்பின்னல்களில்
கோடி மெகா வாட்
மின்சாரம்
ஒளிப்பூக்களின் கடலாய்
அலை விரிக்கிறது.

அவை அத்தனையும்
என் உயிர் செல்களுக்குள்
உன் செல்ஃபோன்
சிணுங்கல்கள் அல்லவா?
நீ என்ன சொன்னாய்?
நான் என்ன சொன்னேன்?
என்பதில்
அர்த்தம் தேடும்
அர்த்தங்கெட்ட வேலை
நமக்கு எதற்கு?
நீ சிணுங்கிக்கொண்டே இரு.
அந்த மாய ஒலிச்சித்திரங்கள்
எனக்கு மட்டுமே கேட்கும்
அஜந்தா குகை எதிரொலிகள்

==============================================

எழுதியவர் : ருத்ரா (13-Jul-16, 8:56 am)
பார்வை : 59

மேலே