கூண்டுக்கிளி

மங்கியதோர் நிலவொளியினிலே
ஊரடங்கி உறங்கயிலே
சோடிக் கிளியிரண்டு
சோகமாய் ஒதுங்கியதென்ன!!

சுகம் காணும் வேளையிலே
தமை மறந்து இருக்காமல்
வி்ட்டம் பார்த்து
விழித்திருப்பதென்ன!!

சுதந்திரமாய் சேராமல்
ஊர் பறந்து களிக்காமல்
மடை திறந்து சேர்ந்தழுவதற்கு
தடையேதிருப்பதென்ன!!

தங்கக் கூண்டுக்கிளியாக
பால் பழம் உண்டே வளர்ந்தாலும்
தன் சோடிக்கிளிக்காக
ஏங்கியே இருப்பதென்ன!!

சோடிக்கிளியாக
சுதந்திரமாய் ஓர் கூட்டில்
சுகம் தேடி வாழ்வதற்கு
தடையேதும் இருப்பதென்ன!!

எழுதியவர் : ஜவ்ஹர் (13-Jul-16, 10:17 am)
பார்வை : 182

மேலே