பாட்டி செய்த வடகறி

பள்ளியிலிருந்து மாலை

வீடு வந்த சிறுவன்

'பாட்டி ரொம்ப பசிக்குது

எதானா சூடா திண்டி

செய்து தரையா ' என்று

கொஞ்சலாய் கெஞ்சி கேட்க

'ரெண்டு நிமிட நூடுல்ஸ்

செய்து தரட்டா

பாட்டி கேட்க ,பேரனோ

'அய்யோ பாட்டி

உனக்கும் அம்மாவைப்போல்

வேறு நல்ல திண்டி

செய்ய தெரியாதா' என்று

நக்கலாய் கேட்க

நொந்துபோன பாட்டி

ஒரு நிமிடம் யோசித்த பின்னே

'இதோ இன்னும் பத்து

நிமிடத்தில் நீ விரும்பும்

சிற்றுண்டி செய்து தாரேன்

கை கால் கழுவி

வந்து உட்கார் என்றவள்

சமையல் கட்டு வந்து

காலையில் செய்த

வடை, போண்டா

சற்று மீதி இருக்க

பத்திரமாய் எடுத்து வைத்தது

ஞாபகம் வர

சட்டுனு காஸ் அடுப்பு ஏற்றி

சொகுசாய் வாணலி அமர்த்தி

கொஞ்சம் எண்ணெய் இட்டு

காய்ந்ததும் கடுகு ஜீரகம்

தாளித்த பின்னே

மீந்த வடை போண்டாவை

சிறு சிறு துண்டாய் நறுக்கி

அதில் சேர்த்து

நறுக்கி வைத்த வெங்காயம்

நாளிதழ் பூண்டும் சேர்த்து

பச்சை மிளகாய் ஒன்று

சிறு சிறு துண்டாய் சேர்த்தாள் பாட்டி

பொன் நிறமாய் கலவை தோன்றி

கம கம என்று மணம் பரப்ப

சிறிது நீர் சேர்த்து

இஞ்சி கொத்தமல்லி

சேர்த்து சற்றே கொதிக்க விட்டாள்

அவ்வளவில் பேரனும் ஓடி வந்தான்

பாட்டி சிற்றுண்டி வாசனை

மூக்கை துளைக்கதென்றான்


ஆமாண்டா என் அருமைப் பேரா

உனக்காக பாட்டி பக்குவமாய்

செய்த இந்த சுவையான

' வடகறியை' மெதுவாய் அமர்ந்து

சுவைப்பாய் பசியாற

இந்த வட சென்னை பகுதியிலே

என் வடகரிக்கு இணையாய்

சுவையில் சிறந்த சிற்றுண்டி

உண்டா நீயே சொல் ' என்றாள்

பசி ஆறியப் பின்னே '

' பாட்டி பேஷ், பேஷ்

நீ செய்த பலகாரம்'

இது செய்ய

என் அம்மாவிற்கு

ஏன் சொல்லி தரலை '

என்று நக்கலாய்க் கேட்டுவிட்டு

ஓடி விட்டான் விளையாட

வெகு ஆனந்தமாய் .













என்னருமைப் பேரனே

எழுதியவர் : (13-Jul-16, 5:04 pm)
பார்வை : 65

மேலே