நீ வா

வெள்ளை காகிதம் நான்
கவிதை எழுத நீ வா

வீட்டு வாசல் நான்
கோலமிட நீ வா

ஜன்னல் ஓரம் நான்
வேடிக்கை பார்க்க நீ வா

காலை தேநீர் நான்
பருகி விட நீ வா

வானில் நிலா நான்
என்னுடன் நடக்க நீ வா

காதல் நாயகன் நான்
மணந்துக் கொள்ள நீ வா ....

எழுதியவர் : கிரிஜா.தி (13-Jul-16, 4:25 pm)
Tanglish : nee vaa
பார்வை : 73

மேலே