வேட்டையாடும் கண்கள்

அழகை மட்டுமே ஆயுதமாய் கொண்டு -தினம்
வானில் வலம் வரும் நிலவே!
காணும் கண்களையெல்லாம் இரசிக்கச் செய்து
ஏடுகளில் எல்லாம் கிறுக்கச் செய்து
நோஞ்சான் இளைஞர்களையும்
போர் தொடுக்கச் செய்து...
வேல்விழியால் ஆண்களை வீழ்த்தி
வேங்கைகளையும் எதிர்த்து விரட்டி வேட்டையாடி
போர் வீரர்களையெல்லாம் கணையால் அடிமையாக்கி
ஆட்டிப் படைக்கும் ஜான்சி இராணியே...
என்னையும் இன்று அடக்க வந்தியோ?

நோக்குக்கு எதிர் நோக்கு நோக்கி
என் நேருக்கு நேர் நின்று தாக்க வந்தியோ?
வேண்டாம் பெண்ணே! கூர்ந்து பார்க்காதே என்னை!
எனது வித்தையைக் கண்டு
நாணித்தான் நிற்கப் போய்கிறாய்
நீதான் இன்று!
போர் முடிந்தால்தான் தெரியும்
வீரர் யாரென்று?!

எழுதியவர் : கிச்சாபாரதி (13-Jul-16, 10:54 pm)
Tanglish : vettaiyaadum kangal
பார்வை : 114

மேலே