காதல் கொலை

இருபாலரிடத்தே மலர்ந்த இனியதொரு காதல்

பிற்பாதியில் இனிதென்று இல்லறம் ஆகி;

தமக்கென்று பொருள் ஈட்டிய காலம் போகி,

ஒருபாலரிடத்தே மலர்ந்த காதல் ஒவ்வாமையால்

பிரிதென்ற போக்கைஏற்க இயலாமை மக்களிடத்தே

மிகுதியாய் ஆனபின் காதல் கொலைகளும்

அதன் கொடூர தடயங்களும் இப்பூலகில் அரங்கேறி,

சம்மதிக்காவிட்டால் ஒரு சாரரின் கையில்;

சம்மதித்தால் பெற்றோர்களால் கௌரவ சமாதி!!

புலம்பி பயனல்ல; இனிதாவது நடவாமல் காப்போம்

காதல் கொலைகளையும்! அதன் கோரத் தாக்கத்தையும் !

கோழைகளின் கொலையில் சாவதுஉயிர் மட்டும்

அல்ல காதலும் தான்...

எழுதியவர் : க.தினேஷ் குமார் (14-Jul-16, 1:16 pm)
பார்வை : 88

மேலே