என் விடிகாலை பொழுது - ஆனந்த் சுப்ரமணியம்
அ - அலாரம் சத்தம் கேட்டு
ஆ - ஆனந்தன் எழுந்தான்
இ - இன்முகத்தோடு
ஈ - ஈ என்ற சிரிப்போடு
உ - உன்னத நோக்கத்துடன்
ஊ - ஊக்கம் பல கொண்டு
எ - எண்ணங்கள் பல ஓட
ஏ - ஏற்றமிகு பொழுதோடு
ஐ - ஐங்கரனை வணங்கி
ஒ - ஒருமித்த கருத்துடன்
ஓ - ஓயா சுறு சுறுப்புடன்
ஔ - ஔஷதம் அறவே இன்றி
ஃ - அஃதே விடிகாலை பொழுதாய் மலரந்தது.