காதல் கல்வெட்டுக்கள்

பார்வை சிற்பங்களில் ஜீவன்
ஸ்பரிச கல்வெட்டில் ஆன்மா
உயிரிங்கே உறைந்து கிடைக்க
ஒவ்வொரு நினைவிடம் என் காதல் உறைவிடம்

மூச்சுக்கு மூச்சு உன் நாமம் சொல்லி
மூர்ச்சையாகிய தென் காதல்
பேச்சை கேட்க மௌனத்தில் தூது விட
மரத்துப்போனதென் சாரீரம்

கல்லறையிலிருந்தாலும் கல்வெட்டாய் நான்
காட்சிக்கு தெரியாமல் போனாலும் காதல்
கல்வெட்டுகளில் உறங்குகிறது கணிசமாய்
காத்திருக்கிறேன் மறு ஜென்மமெடுத்து
உன்னை மீண்டும் காதலிப்பேன்,

எத்தனை ஜென்மம் எடுத்து வந்து
உன்னை அடைவேன் அறியேன்
நீ அள்ளித்தரப்போகும் காதலை
மென்று தின்பேன் மீண்டும் மீண்டும்

மரித்தாலும் மீண்டும் தரித்தாலும்
விஷமாயினும் விருட்சமாயினும்
வேண்டுவதொன்றே விட முடியாது
வேறெங்கும் உன்னை விட்டு அகலாது

விஞ்சி நிற்கும் உன் நினைவுகளில்
விறைத்து போகிறேன் தினம்தினம்
விட்டுப்போனாலும் பட்டுப்போனாலும்
கட்டிக்கொள்வேன் மீண்டும் வந்து

காதல் எனை வீட்டில் பூச்சியாக்கினாலும்
விளக்காய் நீயிருக்க வேண்டுவேன்
உனக்காகவே மீண்டும் உருப்பெறுவேன்
ஒவ்வொரு ஜென்மத்திலும் உன்னையே காதலிப்பேன்..!

எழுதியவர் : செல்வமணி (14-Jul-16, 9:14 am)
பார்வை : 162

மேலே