வண்ண மகள்
செப்பனிட்ட வானத்தில்
செதுக்கிய சித்திரங்கள்
இரவினில் மட்டுமே
கண்சிமிட்டும் `தாரகைகள்
மயிலாடும் தோகை வண்ணம்
மேகங்கள் நகரும்விதம்
மேனிதனை மறைத்து
வந்து வந்து முகம் காட்டும்
வண்ண மகள் குளிர் நிலவு
ஆவல் கொண்டமானிடர்கள்
ஆசை கொண்டு ரசிக்கின்ற
தோரணைதான் என்ன என்று
பசுமைமிகு மரங்கள் எல்லாம்
எழிலாக நிழல்தந்து எம்மவரை ரசித்திடுமே
நாணமது கொண்டிங்கு
நாணி நிற்கும் நானிலமும்
நாற்புறமும் நமக்காக
நல்லொளியாய் சிந்துகின்ற
நம் துணையாம்குளிர் நிலவை
சேர்ந்து தான் அனுபவிக்க
என்ன தவம் செய்தோமோ
மின்னுகின்ற தாரகைகள்
மேகங்கள் புடை சூழ
சாமரைகள் வீசி நின்று
தங்கமென மின்னுகின்ற
தண்ணிலவை
வண்ண மகள்
வாழ்கவென்று ஓயாது வாழ்த்திடுதே