தமிழ் மகள்
செந்தமிழை கொஞ்சி பேசி
சின்னதாய் திலகமிட்டு
சிங்கார வீதியில் வலம் வரும்
சித்திரம் போன்றவள்.
சீறிப்பாயும் ஆணின் வேகத்தை
கட்டுப்படுத்தும் இதயம் போன்றவள்.
பண்பாடு பழக்கியவள்
நாகரீகம் கற்றுக் கொடுத்தவள்
மதியின் அழகும்
தளராத தமிழும்
தழைத்தோங்கும் புகழும் உடையவள்.