விட்டுப் போகதே
விழிகளின் முன்னே கலைந்திடும் கனவு
மதியை விட்டு மறைந்திடும் நினைவு
இரு மனம் சேர்ந்து எழுதிய காதல், ஒரு மனம் மட்டும் பிரிந்து போகுது
விட்டுப் போகதே, எனை விட்டுப் போகதே
மேகத்தை கிழித்து மழையென வந்தாய், விட்டுப் போகதே
பூக்களை உடைத்து புன்னகை தந்தாய், விட்டுப் போகதே
கைகளை பிடித்து காதலை தந்தாய், விட்டுப் போகதே
தடுமாறிய நேரம் எனை தாங்கிட நீயும், விட்டுப் போகதே அன்பே விட்டுப் போகதே
நான் தேடும் தூரம் நீ இருந்தால் போதும், விட்டுப் போகதே அன்பே விட்டுப் போகதே