விடியல்கள்
உன் கைப்பேசி உரையாடல்களில்
என் புன்னகை தேசங்கள் ....
உன் தொலை தூர தனிமைகளில்
என் கண்ணீரின் கடல்கள் ....
உன் கை கோர்த்த பயணங்களில்
என் புனித யாத்திரைகள் ...
உன் தோள் சாய்ந்த நேரங்களில்
என் சோகங்களின் முடிவுகள் ....
உன் கண்கள் காணும் திசைகளில்
என் உலகின் விடியல்கள் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
