உன் தோள் சாயும் நேரம் சொர்க்கம்
உனக்காக தானே உயிர் வாழ்கிறேனே......!
எந்நாளும் உந்தன் நிழலாகி போனேன்......!
என் விழிகளிலே விழும் நீரும்.......!
உன் மடியிருந்தால் அது தீரும்........!
என் உயிர் வரையில் எனை ஆளும்......!
நீ உடன் இருந்தால் அது போதும்......!
எந்நாளும் என் வாழ்வில் வசந்தம்........!
காதல் எனும் காகிதத்தில்
நான் வரைந்த ஓவியமே......!
காலமெல்லாம் நான் எழுதும்
காதல் எனும் காவியமே.......!
புன்னகையும் பூவிழியும்
நினைவுகளில் ஓர் சுகமே.......!
வாழ்ந்திடவே வரம் கேட்பேன்
உன்னுடனே ஓர் யுகமே........!
நீ இருக்கும் வரையில்
என் ஜீவன் வாழுமே...........!
நீ பிரியும் நேரம்
இங்கு இல்லை யாவுமே.......!
உன் தோள் சாயும் நேரம் சொர்க்கம்........!