இரவின் மடியில்

இரவின் மடியில்
விழுந்து
கிடந்தேன்.....இதமான
ராகம்
ஒன்று.....சுகமாக
என்னை
தீண்டியது.....

காதலின் தீபமொன்று......
என்று
சொல்லி....
என் காதலின்
காலங்களை
நினைவில்
கொண்டு சேர்த்தது......

நினைவுகளில்
மூழ்கிய
நான்.....ஏனோ
புரியவில்லை......
விழிநீரில்
மூழ்கி விட்டேன்
கண்முன்னே
கலைந்த
கடற்கரை
எழுத்தல்ல என்
காதல்.....காலமெல்லாம்
நெஞ்சம்
சுமக்கும்
நிஜாமாச்சே......

என்றும்
மறந்திடாத
என்னவள்
வண்ணங்கள்.....
என்றென்றும்
என்னுள்ளே
ஓவியமாய்
மாறிக்கொண்டே
இருக்கும்.....உடலோடு
உயிர்
உள்ளவரை......

மௌனங்களால்
நிமிஷங்களை
விரட்டிவிட்டு
வாழ்வது
அவ்வளவு
சுலபமில்லை.....
நிமிஷங்கள்
மறந்தாலும்
நிஜமில்லை
என்காதல்
என்று.....வாழும்
ஜீவன்
நானே......

உழைப்பின் வலியோடு
உணர்வின் வலிகள்
இணைந்து
உலக வாழ்வை
உண்மையில்
வெறுத்தே
போகிறது......!!

எழுதியவர் : thampu (15-Jul-16, 1:38 am)
Tanglish : iravin madiyil
பார்வை : 1118

மேலே