ஒரு ஜோடிக் கிளியின் சோகக் கதை

அந்தி மயங்கும் வேளை

ஆத்தங்கரை ஓரம்

சற்று காற்று வாங்க வந்தேன்

நடந்து ஓய்ந்தபின்னே

காலாற வந்தமர்ந்தேன்

நதியோர மாஞ்சோலைக் கீழே

வானத்தையே அண்ணாந்து

பார்த்திருந்த வேளையிலே

மாமரத்து பஞ்சவர்ண கிளி இரண்டு

கொஞ்சிக் கொஞ்சிமேலும் கீழும்

பறந்து வந்து காதல் களியாட்டம்

புரிந்து விந்தைப் புரிந்தன

சற்றே பிரிந்த ஆண் கிளி

பழுத்த மாங்கனி ஒன்றை

தன் வளைந்த அலகால் கொத்தி

விரைந்தே வந்து தன் பெட்டைக்கு

ஊட்டி விட்டு தானும் உண்டு

முடிவில் கிளையில் வந்தமர

எங்கிருந்தோ பறந்துவந்த

பருத்த கழுகு ஒன்று தன்

பொல்லா அலகால் ஆண் கிளியைக்

வந்து தாக்கியது ஐயகோ

கிளியின் சிறகுகள் தெறித்து

காற்றில் சிதறி மண்ணில் வீழ்ந்தன

கிளியின் மாமிசத்தை லகுவாய்

காலில் இடுக்கி வான் நோக்கி

எங்கோ பறந்து போனது அந்த

ராக்கத கழுகும்

அதிர்ச்சியில் மீண்டு நான்

மண்ணில் வீழ்ந்த அந்த

ஆண் கிளியின் இறகுகளைப் பார்த்தேன்

அதிர்ந்தேன் ; ஆம் அவை

ரத்தம் தோய்ந்த இறகுகள்!

கழுகு தன் உணவிற்கு வேண்டி

செய்த பறவை க் கொலையின் சின்னம் !

துக்கத்தில் ஆழ்ந்த பெட்டைக் கிளி

பாட மறந்து தன் வயம் இழந்து

செய்வதறியாமல் தவித்தது

அதைப் பார்த்து

என் மனம் கனத்தது

நெஞ்சில் உதிரம் சொட்ட

வீடு திரும்பினேன் .

ரெட்டைக் கிளியின்

சோகக் கதையில்

விதியின் விளையாட்டுண்டு

இயற்கையின் நியதியமுண்டு

என்று உணர்ந்து பின்னே

அமைதி அடைந்தேன் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jul-16, 7:10 pm)
பார்வை : 161

மேலே